AK 61 : கண்டிஷன் போட்ட அஜித் – பதட்டத்தில் இருக்கும் வினோத்.!

ajith and vinoth
ajith and vinoth

நடிகர் அஜித்குமார் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தியது அதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதற்கான பூஜையை அண்மையில் போடப்பட்டது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் எடுக்கப்பட உள்ளது இதற்காக அஜித் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

அஜித்தின் 61 வது படத்தின் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த படம் முழுக்க முழுக்க வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து அடிப்படையாக உருவாகும் என தெரிய வருகிறது இதற்காக அஜித் அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தை இந்த வருடமே கொடுக்க அதிகம் ஆசைப்படுகிறார் அதனால் இயக்குனர் ஹச். வினோத்துக்கு ஒரு கட்டளையை போட்டுள்ளார் அதாவது இந்த படத்தை இரண்டு மாதங்களிலேயே நீங்கள் முடித்து விட வேண்டும் என கூறி உள்ளார் அதற்கு வினோத் தலையசைத்து உள்ளார்.

வினோத் சொன்னபடி இரண்டு மாதத்தில் படத்தை முடிக்க ரெடியாக இருந்தாலும் மற்றவர்கள் வினோத்துக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் மட்டுமே அது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை எடுத்து முடிக்கவே இரண்டு வருடங்களுக்கு மேல் அவகாசம் எடுத்துக் கொண்டார்.

இப்பொழுது AK 61 படத்திற்கு இரண்டு மாதம் அவகாசம் கொடுத்துள்ளதால் மண்டையை பிச்சி கொண்டிருக்கிறாராம். படத்தின் முதல் சூட்டிங் 45 நாட்களில் எடுக்கப்படும் எனவும் அடுத்த பத்து நாட்கள் லீவு விட்டு பின் படத்தின் ஷூட்டிங் தொடரும் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.