ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் AK 61 – அஜித் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.?

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு இன்னொரு படத்தை கொடுக்க தொடர்ந்து இரவு பகல் பார்க்காமல் நடித்து வருகிறார். AK 61 வது திரைப்படத்தை வினோத் தனக்கே உரிய பாணியில் இயக்க இந்த படத்தில் அஜித்துக்கு எந்த விதமான தடையும் இருக்காது..

என திட்டவட்டமாக கூறியதை அடுத்து வேற லெவலில் படம் உருவாகி  வருகிறதாம். இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரிக்கிறார். AK 61 படத்தில் அஜித்துடன் சேர்ந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா மற்றும் பலர் நடிக்கின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் 32 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் AK 61 படத்தில் அஜித் ஒரு செம மாஸ் ஆன வில்லனாக சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது நிச்சயம் அது மங்காத்தா கதைகளம் போலவே ஒரு கதாபாத்திரத்தில் தான் அஜீத் நடித்து இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படத்தில் அஜித்துக்கு இரண்டு விதமாக வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி தற்பொழுது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் இச்செய்தியை பலரும்  கொண்டாடியும் வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version