வெளிநாட்டு பத்திரிகையிலும் கெத்து காட்டிய தல அஜித்தின் துணிவு.! மிரட்டும் வசூல்…

0
thunivu
thunivu

அஜித், எச் வினோத், போனி கபூர், இவர்களது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரச்சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் துணிவு.

இதற்கு முன்பாகவே இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் அஜித் அவர்கள் இரண்டு முறை இணைந்துள்ளார். ஆனால் அந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யாத காரணத்தால் கலவையான விமர்சனத்தையும் கலவையான வசூலையும் பெற்றது.

இந்த நிலையில் எச் வினோத் மற்றும் அஜித்தின் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகிய துணிவு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே 24 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் வெளியானது இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு இடையே பல போட்டிகள் ஏற்பட்டது இந்த நிலையில் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் அதிக வசூலை ஈட்டி வருகிறது.

பெரும்பாலும் அஜித்தின் படங்கள் என்றாலே தமிழை தாண்டி மற்றும் மாநிலங்களும் சரி மற்ற நாடுகளிலும் சரி பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் துணிவு திரைப்படம் அதையெல்லாம் ஒரே நொடியில் நொறுக்கியது. அதாவது துணிவு திரைப்படம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள பிரபல செய்தித்தாளில் துணிவு படத்தை பல பக்கங்களில் பாராட்டி எழுதி உள்ளனர் இதனாலே வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் அதிக கலெக்ஷனை பெற்று வருகிறது துணிவு.