முக்கிய இடத்தில் 70% திரையரங்குகளை கைப்பற்றிய அஜித்தின் “துணிவு” திரைப்படம்..!

நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத்துடன்  பயணித்து வருகிறார். இப்பொழுது கூட இயக்குனர் ஹச். வினோத் உடன்  கைகோர்த்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் முக்கிய இடங்களில் அதிக திரையரங்குகளை துணிவு திரைப்படம் தான் தட்டித் தூக்கும் என ஏற்கனவே சொல்ல போட்ட நிலையில் அது குறித்து ஒரு தகவலும் தற்பொழுது வெளிவந்துள்ளது அதாவது சென்னை தவிர முக்கிய இடங்களாக பார்க்கப்படுவது TT ஏரியாவான திருச்சி மற்றும் தஞ்சாவூர் தான்..

இந்த இடத்தில் தான் தற்பொழுது துணிவு திரைப்படம் 70% திரையரங்குகளை தட்டி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு திரைப்படம்  எந்த இடத்தில் எத்தனை தியேட்டர்களை கைப்பற்றி இருக்கிறது என்பது குறித்து பேசி வருகின்றனர்.

Leave a Comment