இப்பவே விஜய் படத்தின் சாதனையை அடித்து நொறுக்கிய அஜித்தின் “வலிமை” – எங்கு தெரியுமா.?

சினிமாவுலகில் சைலண்டாக இருந்துகொண்டு கோடானகோடி ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார். இதனால் ரசிகர்களும் சற்று அமைதியாக இருந்தனர் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் திரைப்படம் வராததால் ரசிகர்கள் ரொம்ப வருத்தத்தில் இருந்தனர்.

இதனை உணர்ந்துகொண்ட வலிமை படக்குழு இதற்கு மேல் பொறுமை காத்தால் வெஸ்ட் என நினைத்து ஒரு வழியாக வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய இருக்கிறது முன்பதிவு டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என சொன்ன உடனே ரசிகர்கள் முட்டி மோதிக்கொண்டு முதல் இரண்டு நாள்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

எதிர்பார்க்காத அளவிற்கு தற்போது புதிய வசூலை வலிமை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளிலும் மேலும் ஆந்திராவில் 750 ஆந்திராவில் 300 ஹிந்தியில் 1000 திரையரங்குகளுக்கு மேல் என இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வலிமை திரைப்படம் கோலாகலமாக வெளியாகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே விஜய்யின் சாதனையை முறியடித்துள்ளது பிரான்ஸ் நாட்டில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலை வவிட  வலிமை இப்பொழுது முன் பதிவிலேயே அந்த வசூல் சாதனையை தட்டி தூக்கியதாக கூறப்படுகிறது.

இதனை சினிமா வட்டாரங்களில் பேசிவருகின்றனர் வலிமை திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி ஒருவழியாக பிரமாண்டமாக வெளியாகிறது ஆனால் மாஸ்டர் திரைப்படம் அப்படி கிடையாது. அப்போ கொரோனா பரவல் இருந்ததால் அதிக திரையரங்கில் வெளியிடாமல் போனதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment