அஜித்தின் வலிமை திரைப்படம் எந்தெந்த இடங்களில் வெற்றி.. தோல்வி..தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமா உலகில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்து போன படங்களாக இருந்து வந்துள்ளன அந்த வகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படமும் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியானது.

வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகி இருந்ததால் பொதுமக்களையும் மறுபக்கம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது இதனால் 4 வாரங்கள் திரையரங்கில் மாஸ் காட்டியது . படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்திருந்தாலும் வசூலில் மட்டும் எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்கியது.

வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர் வாங்கிய பணத்தை விட நல்ல லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பெற்றுக்கொடுத்தது வலிமை திரைப்படம்தான். அஜித் மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்து விட்டார்கள் எனக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் .  அந்த வகையில் மீண்டும் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 60வது திரைப்படத்தில் நடிகை இருக்கிறார்.  இந்த படம் வெறும் 14 மாதங்களிலேயே முடித்து விட்டு தனது 62வது திரை படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தின் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது வலிமை திரைப்படம் எந்த இடத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது எந்த இடத்தில் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறித்து புள்ளி விவரமாக தகவல்கள் வெளியாகியுள்ளது இது குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழகம் – 120 கோடிக்கு மேல் வெற்றி,  கர்நாடகா – 10 கோடி வெற்றி, கேரளா – 3.5 கோடி தோல்வி, தெலுங்கு – 6 கோடி வெற்றி, வட இந்தியா – 5.5 கோடி  own release, usa – கனடா – 3.8 கோடி தோல்வி, யுரோப் – 4 கோடி தோல்வி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து – 1.2 கோடி ஆவ்ரேஜ், மலேசியா 11 கோடி வெற்றி, சிங்கப்பூர் 4.5 கோடி  வெற்றி, ஸ்ரீலங்கா –  8.5 கோடி வெற்றி, gulf – 11 கோடி வெற்றி, பிரான்ஸ்  – 1.7 வெற்றி, மற்ற நாடுகள் 5 கோடி ஆவ்ரேஜ்.

Leave a Comment