“வலிமை” படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்த அஜித்தின் ரீல் மகள் – வைரலாகும் வீடியோ.

அஜித் படமென்றாலே அவரது ரசிகர்கள் சும்மாவே கொண்டாடுவார்கள் வலிமை திரைப்படம் இரண்டு வருடங்களை தாண்டி ஒருவழியாக இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளதால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாத்தில் இறங்கி உள்ளனர்.

கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சாலையில் போய்வரும் வண்டிகளையும் மறி த்து கொண்டாடி அலப்பறை  செய்த சம்பவம் வேற லெவல். எது இப்படியே சம்பவம் செய்து உள்ளனர் ரசிகர்கள் மேலும் வலிமை திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், திரில்லர், சென்டிமெண்ட், கலந்த திரைப்படமாக இருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களையும், ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் கூட்டம் அலை மோதினாலும் அதன் பின் பொதுமக்களையும் வெகுவாக வலிமை திரைப்படம் கவரும் என கூறப்படுகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வெளி வருகின்றன.

வலிமை திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா,  யோகி பாபு மற்றும் புகழ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர். வலிமை படம் முதல் நாளே சுமார் 30 கோடிக்கு மேல் அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் சவுதி அரேபியாவில் மிக பிரம்மாண்டமாக அஜித்தின் வலிமை படம் வேற லெவல் வெளிவர உள்ளது.

இப்பொழுது நடிகை அனிகா வலிமை படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment