சினிமா உலகில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நல்ல காசு பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கினார் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் தான் படம் காசு பார்ப்பதையும் தாண்டி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒவ்வொரு படத்தையும் பிளாக்பஸ்டர் படமாக கொடுக்க ஆசைப்படுகின்றனர்.
அந்த வகையில் இளம் இயக்குனரான ஹச். வினோத் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த மூன்று திரைப்படங்களும் இதுவரை பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் நான்காவது படம் அஜித்தை வைத்து இவர் எடுத்துள்ளார் ஏற்கனவே பிங்க் படத்தின் ரீமேக்கை அஜித்தை வைத்து இருந்த நிலையில் வலிமை திரைப்படத்தை அவர் எடுத்து முடித்துள்ளார்.
படம் சிறப்பாக வந்துள்ளதாக அண்மையில் அஜித் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து விட்டு வினோதிடம் கூறியதாக தகவல்கள் உலா வருகின்றன வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது அதற்கு முன்பாக ரசிகர்கள் அப்டேட் என்ற பெயரில் உலக அளவில் கேட்டு வந்த நிலையில் தற்போது கேட்காமலேயே அப்டேட்டை அள்ளி வீசி வருகிறது வலிமை.
நேற்று கூட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த மேக்கிங் வீடியோவில் கடைசியில் அஜித் பைக்கை ஓட்டி வரும் போது உண்மையாகவே விழுந்து விட்டாராம் அப்பொழுது பைக் சுக்குநூறாக உடைந்தது அந்த பைக்கை மிகப்பெரிய விலை கொண்ட பைக் அது இந்தியாவில் கிடைப்பது மிக கஷ்டம்.
ஆனால் அஜித்தோ அதே பைக்கை இந்தியாவில் யார் வைத்து இருக்கிறார்கள் என அந்த கம்பெனிக்கு போன் போட்டு கேட்டுள்ளார் பின் அவரிடம் பேசி அந்த பைக்கை வாங்கி ஒரு வழியாக அடுத்த நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு அந்த படத்தின் காட்சியை நடித்து முடித்தார்.
