அஜித்தின் மே 1 பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.. போஸ்டர் உடன் சேர்ந்து என்ன வர உள்ளது தெரியுமா.! முழு விவரம் இதோ.

திரை உலகில் ஜொலிக்கும் அஜித் தனது நெருங்கிய நண்பர் மற்றும் ரசிகர்களைத் தவிர வேறு யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார் என்பது ஊரறிந்த விஷயம்.

அதிலும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக இருப்பதோடு அவர்களுக்கு அள்ளியும் கொடுப்பதில் வல்லவராக இருக்கிறார் இதனாலேயே அவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று  பாசத்துடன் அழைக்கின்றனர்.

தனக்காக எதை வேண்டுமானாலும் செய்ய ரெடியாக இருக்கும் ரசிகர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியாக இருக்கிறார் தல அஜித்.

படத்தில் ரிஸ்க் எடுக்காமல் இருக்க பலரும் டுப் போட்டு பார்த்திருக்கலாம் பெரும்பாலும் அஜித் படங்களில் டுப் போடாமல் ஒரிஜினல் ஆகவே நடித்து  ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டது.

வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து வந்த அஜீத் தற்போது ஒரு வருடமாகியும் அடுத்த படமான வலிமை வெளியாகமல் இருப்பதால் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்த நாளான மே 1 வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமையும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என கூறப்படுகிறது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால்  ரசிகர்கள் வேற லெவல்லில் கொண்டாடு கின்றனர்.

Leave a Comment

Exit mobile version