அஜித்தின் மங்காத்தா 2 உருவாகப் போகிறது.! திடீர் சந்திப்பால் வந்த குழப்பம்..!

தமிழ் சினிமாவின் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வலிமை. அந்த திரைப்படம் அவருக்கு  நல்ல வரவேற்பு  பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் தல அஜித்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும்  பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அஜித் மற்றும் அவரது குடும்பத்துடன் இயக்குனர் தயாநிதி அழகிரி சந்தித்து புகைப்படங்களை எடுத்து  வெளியிட்டு உள்ளார்.  ஏனென்றால் அஜித்துக்கு ஒரு  திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மங்காத்தா திரைப்படம் தான். அந்த திரைப்படத்தை இயக்குனர் தயாநிதி அழகிரி இயக்கினார்.

ajith
ajith

தல அஜித் குடும்பத்துடன் அழகிரியை போய் சந்தித்தது ரசிகர் மத்தியில் பெரும் கேள்வி எழுப்பி வருகிறது. ஏனென்றால் மங்காத்தா இரண்டாம்  பாகம்  இயக்கப் போகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தல அஜித்  மங்காத்தா திரைப்படத்தில் அவரது சிறப்பான நடிப்பைக் கொடுத்து ரசிகர்கள் மனதில்  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனால் இந்த திரைப்படம்  வந்தால் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று சந்தேகமே இல்லை.

Leave a Comment