நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பரான ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது உள்ள படம் தான் வலிமை.
படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக வசூலில் தாறுமாறான வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது வலிமை படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 61 வது திரைப்படத்திற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்து நடிக்க ரெடியாக இருக்கிறார்.
சினிமா உலகில் எப்படி இருக்கிறாரோ அதை விட நிஜ வாழ்க்கையில் இன்னும் தனது குடும்பத்துடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார். நடிகர் அஜித்குமார் அமர்க்களம் திரைப்படத்தின் போது ஷாலினியை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
அஜித்தின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியானாலும் பெரிய அளவில் அவரது குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் புகைப்படம் அவ்வளவில் வெளிவராது. இது எல்லாம் நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு சில புகைப்படங்கள் வெளியாகினால் ரசிகர்கள் பெரிய அளவில் வைரல் ஆகி விடுவார்கள்.
அந்த வகையில் அண்மையில் கூட சின்ன தல ஆத்விக் பிறந்தநாளுக்கு அஜித் மற்றும் அவரது குடும்பம் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அது வைரல்லான நிலையில் தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா தனது அம்மா மற்றும் சித்தி உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

