அஜித் மகளை அலேக்கா தூக்கி கொஞ்சோ கொஞ்சோன்னு கொஞ்சம் தளபதி விஜய்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்களை தமிழ் சினிமாவில் இரு துருவங்கள் என்றே கூறலாம் அந்த அளவு இவர்களது ரசிகர்கள் இவர்களின் திரைபடம் மற்றும் பிறந்தநாள் என அமர்க்களப் படுத்துவார்கள். தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு அஜித், விஜய் என்ற பேச்சி நீண்டகாலமாக  இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருக்கிறார்கள். மேலும் அஜித் விஜய் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள் ஆரம்பகாலத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நேருக்கு நேர் திரைப்படத்திலும் கூட சூர்யாவுக்கு முன்பு அஜித் விஜய் தான் இந்த திரைப்படத்தில் நடித்து வந்தார் ஒரு சில காரணத்தால் தான் அஜித் இந்த திரைப்படத்திலிருந்து வெளியேறினார்.

ஒரு சில திரைப்படங்களில் இருவரையும் மாறி மாறி விமர்சனங்கள் மறைமுகமாக செய்தாலும் நிஜ வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள் ஆனால் இவர்களது ரசிகர்கள் இதுவரை இருவரும் ஒன்றாக இருக்க மாட்டார்கள். இந்தநிலையில் அஜித்ஷாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்கள் திருமணத்திற்குப் பிறகு நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் விஜய்க்கு திருமணமாகி திவ்யா ஷாஷா, சஞ்சீவ் என்ற மகனும் இருக்கிறார். அதேபோல் தல அஜித் அவர்களுக்கு அனோஷ்கா  ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார் இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் விஜய் மகள் மற்றும் அஜித் மகள் இருவரும் ஒன்றாக பேட்மிட்டன் பயிற்சி எடுத்தவர்கள் தான். அதேபோல் விஜய் மகளுக்கு அஜித் ஒரு முறை அறிவுரை கூட கூறியுள்ளார். மேலும் தனது மகளை அழைத்து சென்ற அஜித், விஜய் மகளிடம் எப்பொழுதும் பேட்மிட்டன் விளையாடுவதை நிறுத்தி விடாதே என கூரியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பேட்மிட்டன் விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கலாம் என அறிவுரை கூறியிருந்தார் இந்த செய்திகள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் அஜித் மகள் அனோஷ்காவை சிறு வயதில் இருக்கும் பொழுது விஜய் அவர்கள் தூக்கிக் கொஞ்சிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் அதிகமாக பார்த்து பகிர்ந்து வருகிறார்கள்.

தற்பொழுது தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்திலும் அஜித் வலிமை திரைப்படத்திலும் நடித்து கொண்டுவருகிறார்கள் இதில் வலிமை திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.