அஜித்தின் துணிவா? விஜயின் வாரிசா? எதை பார்ப்பீர்கள்.! ஜிபி.முத்துவிடம் கேள்வி எழுப்பிய நிருபர்.! அதற்கு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா

gp-muthu
gp-muthu

கடந்த சில நாட்களாக வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இதனால் நடிகர்கள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மாற்றி மாற்றி சண்டை போட்டு வரும் நிலையில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் என்ன பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.பி.முத்துவிடம் முதலில் எந்த திரைப்படத்தினை பார்ப்பீர்கள் என்று குறித்து கேள்வி கேட்ட நிலையில் அதற்கு ஜேபி முத்து பதில் அளித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் சசிகுமார் ஜி.பி முத்துவிற்கு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் தற்போது  அதுவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றவர்தான் ஜி.பி முத்து டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்தார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் மூன்றாவது வரை படித்திருக்கிறார். இந்நிலையில் யூடியூப் மூலம் தன்னுடைய டிக் டாக் வீடியோக்களை பதிவிட தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

எனவே இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் இவருக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் ஜி.பி முத்துவிடம் விஜய் நடித்த வாரிசு அல்லது அஜித் நடித்த துணிவு இரண்டு திரைப்படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜிபி முத்து விசுவாசம் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவே முதலில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை பார்ப்பேன் என கூறிவிட்டு பிறகு விஜய் நடித்த வாரிசு படத்தை பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார்.