FIFA உலக கோப்பை போட்டியில் அஜித்தின் துணிவு – வைரலாகும் புகைப்படம்.

நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இயக்குனர் சரண், சிறுத்தை சிவா ஆகியவர்களை தொடர்ந்து இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.

இந்த படமாக அவருக்கு 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்..

இளம் நடிகர் வீரா, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு  கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க சைலண்டாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.

அண்மையில் அஜித்தின் இரண்டு புதிய போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் வருகின்ற ஒன்பதாம் தேதி சில்லா சில்லா பாடல் வெளியாக இருப்பதாக கூறியுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் ரசிகர்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே பேனர் மற்றும் கட்டவுட் வைத்து அசத்தி வருகின்றனர்.

இந்த சமயத்தில் அஜித் ரசிகர் ஒருவர் Fifa கால்பந்து போட்டியின் பொழுது வெயிட்டிங் பார் துணிவு பொங்கல் என்று எழுதி அதை காட்டிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல், மாஸ் எனக் கூறிய லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

https://twitter.com/aravinth43AK/status/1599570672321441793?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599570672321441793%7Ctwgr%5E98d42e22af3f5ce99ea00682f04da1952157d2b1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fthunivu-fan-promotion-in-fifa-world-cup-1670236271

Leave a Comment