அஜித் திரைபயனத்தை திருப்பிபோட்ட அமர்க்களம் எவ்வளவு வசூல் தெரியுமா.?

0
amarkalam
amarkalam

திரை உலகில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணம் அப்படிதான். அஜித் ஷாலினி அமர்க்களம் திரைப்படத்தின் போது காதலில் விழுந்து பின் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர் அண்மையில் கூட அஜித்தின்  மச்சினிச்சி அஜித் – ஷாலினி இருவரும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தினார். இருவரும் இப்போதும் சரியாக காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். இந்த படத்தில் அஜித் – ஷாலினி இருவரும் ஹீரோயினாக நடித்து அசத்தினார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இருந்ததால் படம் விறுவிறுப்பாக நகர்கிறது மேலும் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாகவே இருந்ததால் இளம் மட்ட ரசிகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை இந்த படத்தை பார்த்து கண்டுகளித்தனர்.

அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா சரத்குமார், ரமேஷ்கண்ணா, வினுசக்கரவர்த்தி, அம்பிகா, தாமு, வையாபுரி, சார்லி என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துக் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அஜித்தின் கேரியரில் பெஸ்ட், மிக முக்கியமான படம் காரணம் நடிகர் அஜித்துக்கு  25வது திரைப்படம் கூட.. படம் வெளிவந்து  வெற்றி பெற்றது.

இப்படி இருக்கின்ற நிலையில் அமர்க்களம் திரைப்படம் அப்பொழுது வெளியாகி எவ்வளவு வசூல் செய்தது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்கையில் சுமார் 28 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.