அஜித்தின் 30 வருட திரைபயணம்..! ஒரு ரசிகனாக வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்..!

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் அண்மை காலமாக ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து படங்களில் நடித்து வருகிறார் அந்த படங்களும் வெற்றி படங்களாக மாறுகின்றன. இப்பொழுது கூட நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம் படத்திற்கு பிறகு இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என பலரும் சொல்லி வருகின்றனர் அந்த அளவிற்கு அஜித்தும் சரி ஹச். வினோத்தும் சரி பெரிய அளவில் உழைத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படபிடிப்பு அஜித் இல்லாமலேயே நடத்தப்பட்டது மூன்றாவது கட்டப்படபிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது.

ஏகே 61 படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பாலிவுட் பிரபலமான சஞ்சய் தத்தும் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை இருந்தும் இந்த செய்தி பெரிய அளவில் பேசப்படுகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை போட்டு ரசிகர்களையும் அஜித்தையும் சந்தோஷப்பட வைத்துள்ளார்.  அது என்னவென்றால் நடிகர் அஜித் சினிமா உலகில் கால் தடம் பதித்து 30 வருடங்கள் ஆகின்றது இதனை முன்னிட்டு விக்னேஷ் சிவன் ஒரு அழகான பதிவை போட்டுள்ளார்.

தன்னம்பிக்கையின் 30 வருடம், தன்னம்பிக்கை, ஆர்வம், இறக்கம், பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இந்த மனிதனை இப்பொழுது 30 ஆண்டுகளாக மக்களின் இதயங்களை ஆள வைத்தது இன்னும் பல வருடங்கள் உங்களை பார்த்து சந்தோஷமாக இருக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் மற்றும் விரும்புகிறோம் என அஜித்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டி உள்ளார் விக்னேஷ் சிவன்.

Leave a Comment