அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் முதலில் தீபாவளியை குறி வைத்தது ஆனால் டாப் நடிகரின் படங்கள் தீபாவளிக்கு வருவதால் அதிலிருந்து பின்வாங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சொல்லி உள்ளது.
ஆனால் அதற்கு முன்பாக ரசிகர்கள் மற்றும் மக்களை குஷிப்படுத்தும் வகையில் வலிமை படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் பல விஷயங்களை கூறி வருவதோடு மட்டுமல்லாமல் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் தல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கொரோனா காரணமாக வலிமை படம் பல மாதங்கள் படத்தை தள்ளிப் போட்டது. ஒருவழியாக இரண்டு வருடங்கள் கழித்து எப்படியோ படத்தை எடுத்து முடித்து உள்ளது. நிச்சயம் படத்தை பார்ப்பவர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து தான் பார்பார்கள் அந்த அளவிற்கு மிக சிறப்பாக வந்துள்ளது.
என இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து வில்லன் கார்த்திகேயா, புகழ், யோகி பாபு, ஹீமா குரேஷி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மேலும் ரசிகர்கள் தற்போது படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
ஆனால் அதற்கு முன்பாகவே படத்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. அந்தவகையில் தற்போது அஜித் மற்றும் வில்லன் கார்த்திகேயா ஆகியோர் இருவரும் மாசான பைக்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
