மொட்டை தலையுடன் காணப்படும் அஜித்.! இணையதளத்தில் வைரலாகும் தல புகைப்படம்.

திரையுலகில் சிறப்பான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கொடுக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகின்றனர்.

அப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றி / தோல்வியை திரைப்படங்களை கொடுத்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டவர் அஜித்.

தற்போது இளம் இயக்குனரான எச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் சூட்டிங் இரவு / பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு வாந்ததால் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளிவர உள்ளதால் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள கமீஷனர் அலுவலகதற்கு திடீரென தல அஜித் வருகை தந்தார்.

காரணம் அங்கு துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் இருப்பதாக நினைத்து வந்தாக கூறப்படுகிறது. பின் அங்கு கிடையாது என தெரிந்த உடன் பழைய கமீஷனர் அலுவலகத்தில் உள்ள ரைப்பிள் கிளப் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

அங்கே அஜித்தை கண்ட பலரும் சுத்தி வளைத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.

Leave a Comment