நடிகர் அஜித் குமார் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறதாம் அண்மையில் கூட பட குழு பேங்க் மாதிரியான ஒரு செட்டப் போட்டு இருந்த புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, தெலுங்கு பட நடிகர் அஜய், யோகி பாபு, மகாநதி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் பல நடிகர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பாக அஜித் லண்டன் பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சென்னை திரும்பியவுடன் படப்பிடிப்பிற்கு செல்லாமல் அஜித் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு அசத்தி உள்ளார். அஜித் வருவதை ரசிகர்கள் அறிந்திருந்தனர் அதனால் துப்பாக்கி சுடுதல் இடத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
An Unplanned inevitable Sambavam ever Made🔥🔥🔥
This is Called as Loyal Fan Base♥️🔥#PeoplesHeroAJITHKUMAR #AjithKumar #AK61 pic.twitter.com/aNXLjfpZnn
— Gowtham ᵛᵃˡᶤᵐᵃᶤ (@GowthamTAF) July 27, 2022
ஒரு கட்டத்தில் அஜித் துப்பாக்கி சுடுதலை முடித்துவிட்டு ரசிகர்களை சந்தித்தார் மேலும் அவர் அந்த பில்டிங்கின் மேலே உள்ள மாடியில் நின்று ரசிகர்களுக்கு கைகாட்டினார். இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர் மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோக்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.
Alexa Play Nayagan Meendum Varan💥🔥🔥🔥#AK61 #Ajithkumar𓃵 #PeoplesHeroAJITHKUMAR pic.twitter.com/BRbE9jLctm
— AK TнⓂ️мιzн👑✨ (@Ak_Thamizh21) July 27, 2022
OMG … Citizen climax re-create in Trichy rifle club. 🤩❤️🔥#PeoplesHeroAJITHKUMAR#AjithKumar •• #AK61 pic.twitter.com/TT8hfMd7kr
— Anushka Ak rasigai😍 (@anushka1126) July 27, 2022