நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அந்த வகையில் அஜித் அவர்களது ரசிகர்களுக்காக வருடத்திற்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்து வருகிறார். கடைசியாக இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைந்து வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து தற்போதும் ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்து தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது இருந்தாலும் படத்தில் இருந்து எந்த அப்டேட்டும் பட குழு வெளியிடவில்லை.
ஆனால் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த படத்தின் கதை பேங்க் ராபரியை மையமாக வைத்து ஹெச் வினோத் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நயன்தாராவின் கணவர் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன்.
உடன் இணைந்து தனது 62 ஆவது திரைப்படத்தில் இணைய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது. அதனால் இந்த படத்திற்கான கதையை விக்னேஷ் சிவன் தீவிரமாக தயார் செய்து வருகிறார். ஏ கே 61 முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சில மாதங்களாக அஜித்தின் புகைப்படங்கள் பல இணையதள பக்கத்தில் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
#AjithKumar#Ajithkumar𓃵 #AK61
♥️ pic.twitter.com/zDIJIFNn7K— Rameshwaran (@Rameshwaran1810) August 16, 2022
அது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. அது போல் தற்போதும் அஜித் விமான நிலையத்தில் இருந்து இறங்கி பஸ்ஸில் டிராவல் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை தற்போது அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
https://twitter.com/AjithDQ_FC/status/1559382477873070083?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1559382477873070083%7Ctwgr%5E6e82c36a06adb44734e36cbe85074a9834a97c00%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Ftamil%2Fabpnadu-epaper-abpnadu%2Fajithkumarvimananilaiyathilajithvairalakumbukaippadangalengeselkirarteriyuma-newsid-n413821046%3Fs%3Dauu%3D0xa225206d5e88249dss%3Dwsp