காலேஜ் படிக்கும்போது தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித் அப்பொழுதும் மாஸ் தான்.!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமை மற்றும் தனது பாசத்தால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் என்றால் அது தல அஜித்தை தான் கூற வேண்டும் இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே அன்பாக பழகுவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் ஆனால் ரசிகர்கள் அவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்தால் உடனே ஆத்திரம் அடைந்து விடுவார் என்பதும் தெரிந்ததுதான்.

தல அஜித் பொதுவாகவே நிறைய உதவிகளை செய்ய கூடிய நபர் என்று கூட கூறலாம் அந்த வகையில் பார்த்தால் இவர் தனது ரசிகர்களுக்கு மற்றும் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் உடனே யோசிக்காமல் உதவி செய்வார்.

மேலும் இவர் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் இன்னும் முடியாத நிலையில் இருக்கிறது இது மட்டும் முடிந்து விட்டால் படம் முழுவதும் முடிந்தது தான் என்று சமீபத்தில் தகவல் வெளியானது அதுமட்டுமல்லாமல் தல அஜித் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது காபி விளம்பரத்தில் நடித்த வீடியோ காணொளி கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

thala ajith2

இதனையடுத்து தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருகிறார்கள் ஆனால் தல அஜித்தின் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thala ajith

இந்நிலையில் அதே போல் தற்போதும் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்களில் தல அஜித் தனது காலேஜ் படிக்கும் பொழுது தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் அஜித் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிகிறார்.

Leave a Comment

Exit mobile version