முதல் முறையாக 10 கோடி சம்பளம் வாங்கிய அஜித்.. எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் தற்பொழுது துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ஏ.கே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்தது மேலும் பல மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை இந்த துணிவு திரைப்படத்தில் அஜித் கூறியிருந்தார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் மங்காத்தா இந்த திரைப்படம் வெளியான பொழுது இந்த திரைப்படத்தில் அஜித்தின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அஜித் ஒரு காட்டுதனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜூன்,த்ரிஷா,அஞ்சலி,வைபவ்,பிரேம்ஜி,மஹத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள் பிரேம்ஜி இதில் நடித்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து விட்டது.

மங்காத்தா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது  மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது. இதுவரை அஜித் திரைப்பயணத்தில் கண்டிராத வசூலை இந்த திரைப்படம் செய்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி பார்த்தால் அஜித் முதன் முறையாக வாங்கிய டபுள் டிஜிட் சம்பளம் இந்த திரைப்படத்தில் நடித்ததால் மட்டுமே கிடைத்தது என ஒரு சில பிரபலங்களும் கூறி வருகிறார்கள்..ஆம் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு அஜித் பத்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் அஜித்திற்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் பொழுது சம்பளம் அதிகமானது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ajith
ajith

Leave a Comment