வலிமை படத்தில் ரூல்ஸ் போட்டு நடித்த அஜித்.? இந்த விஷயங்கள் எதுவுமே இருக்கக் கூடாது.

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் இப்பொழுது கூட தனது 60வது திரைப்படமான வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தப்படத்தை சதுரங்கவேட்டை தீரன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ஹச். வினோத் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

வலிமை படம் வருகின்ற ஜனவரி 13ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இதுவரை வலிமை படத்திலிருந்து வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்தும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தில் சில கண்டிஷன்கள் போட்டுத்தான் அஜீத் நடித்தார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது வலிமை படத்தில் காவல்துறையில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் என்பது போன்ற சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெறக்கூடாது அதோடு அரசியல் குறித்த சர்ச்சை காட்சிகள் தனிமனித தாக்குதல் கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

பின் வலிமை படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்ததாக கூறப்படுகிறது. தான் நடிக்கும் படங்களில் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அப்படி சிக்கினால் பட தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் என்பதை முன்கூட்டியே அறிந்து  படம் வெளியாகும் போது எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது.

அதற்கு காட்சிகளும் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற முடிவுகளை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்த செய்தி நல்ல விஷயம் எனக் கூறிய ரசிகர்களும் அஜித்திற்கு துணையாக சப்போர்ட் செய்து வருகின்றனர் மேலும் இந்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment