போன் செய்து பிரபல நடிகரை மகிழ்வித்த தல அஜித்.! அதுவும் எப்படி எல்லாம் பாராட்டியுள்ளார் பார்த்தீர்களா.?

தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமா உலகில் பணியாற்றி வந்த பல பிரபலங்களும் குடும்பத்துடன் வெடி வெடித்து ஜாலியாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வந்தார்கள் ஒரு சில பிரபலங்கள் தீபாவளியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுத்தார்கள் அதையும் நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது அண்ணாத்த படம் வெளியாகிய முதல் நாளில் மட்டுமே பல கோடி வசூல் செய்ததாகவும் பல தகவல்கள் கிடைத்தது தற்பொழுது அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுவது.

மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினியை பாராட்டி வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கார்த்திகேயா தெலுங்கில் ஒரு ஸ்பெஷல் பேட்டி ஒன்று கொடுத்தாராம்.

அதில் அவர் பல விஷயங்களை மக்களுக்கு பகிர்ந்தாராம் அதே போல் அவர் அஜித்தை பற்றி பேசியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது வலிமை டப்பிங் பணி முடிந்தவுடன் அஜித் அவர்கள் எனக்கு போன் செய்தார். இந்த திரைப்படத்தில் நீங்கள் மிகவும் அற்புதமாக நடித்துள்ளீர்கள் இப்படிப்பட்ட நடிப்பு உங்களை வருங்காலத்தில் எங்கேயோ கொண்டு செல்லும் என பாராட்டியதாக அவர் கூறினாராம்.

மேலும் இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் பலரும் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை நாங்கள் மிக ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம் வலிமை திரைப்படம் அண்ணாத்த திரைப்படத்தை விட அதிகம் வசூல் செய்து விடும் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment