வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் என்னை மெய்சிலிர்க்க வைத்த அஜித்.! சார்பட்டா பரம்பரை நடிகர் ராஜகண்ணு அதிரடி பேச்சு.

சினிமாவுலகில் திறமையும் ஆர்வமும் இருந்தால் போதும் எந்த வயதில் வேண்டுமானாலும் பட வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில்  80,90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரை பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் என முக்கிய கேரக்டர்களில் நடித்து அசத்தி வருபவர் ஜி. எம். சுந்தர்

ஆரம்பத்தில் படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தனது சினிமா பயணத்தை ஒதுக்கிவிட்டு பிசினஸ் செயலில் ஈடுபட்ட இருந்தார். இருப்பினும் மனசு அவருக்கு சினிமாவில் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என நினைத்தார்.

ஒரு வழியாக நீண்ட இடைவேளைக்கு பிறகு காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதில் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து அவ்வப்போது தலை காட்டி வந்த இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அந்த அளவிற்கு சிறப்பான கதைகள் சிறந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பக்காவாக பொருந்தியது.

2021 – ல் இவர்  ரைட்டர், சார்பட்டா பரம்பரை, மண்டேலா போன்ற சிறப்பான ஹிட் படங்களில் நடித்ததால் 2022  அதிக வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.முதலாவதாக வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் உடன் இணைந்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஜி.எம். சுந்தர் அஜித் குறித்து பேசியுள்ளார். ஒருவழியாக வலிமை படத்திற்குள் கமிட்டாகி விட்டேன் அப்போது நான் அஜித் அவரை பார்த்து மிரண்டு போனேன் அவர் ஒரு ஜென்டில்மேன், மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

அவரிடம் பேசும்போது உங்களுடன் ஓர் படம் பண்ணுவது மிகப் பெரிய ஒரு விஷயம் என கூறினார். அதற்கு இதோ உங்களுடன் நான் பணியாற்றுவது தான் எனக்கு மிகப்பெரிய ஒரு பாக்கியம் என கூறினார் நான் என்ன சார் அப்படின்னு சொன்னேன் உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது அதேபோல் தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது உங்களுடன் பணிபுரிய என கூறினார். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டதாக கூறினார். இச்செய்தி இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version