இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்.. கமலுக்காக விட்டுக்கொடுத்த அஜித்.. அட அந்த மெஹா ஹிட் படமா.?

சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் பொதுவாக தங்களின் திரைப்படத்தைக் கொண்டிருக்கும் பொழுது வேறு ஒருவரின் திரைப்படத்தை இயக்கக் கூடாது என்பதை கவனமாக இருப்பார்கள். .

ஏனென்றால் பல இயக்குனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்குவார்கள் ஒரு மாதத்தில் 15 நாள் ஒரு படபிடிப்பும் இன்னொரு 15 நாள் மற்றொரு படப்பிடிப்பும் நடக்கும் அந்த வகையில் கௌதம் மேனன் இப்படி தான் பல திரைப்படங்களை இயக்குவார்.

மேலும் சங்கர் இதேபோல் கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படமும் மற்றொரு பக்கம் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் ஜேன்ச்சர் என்ற திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கியிருந்தார். அதேபோல் சில நடிகர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இயக்குனர்களின் திரைப்படத்திலும் நடிப்பார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் ஒரே ஒரு திரைப்படத்தை மட்டுமே நடிப்பார்கள்.

அந்த லிஸ்டில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடித்தாள் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடிப்பார் அதேபோல் தன்னை இயக்கும்  இயக்குனர் தன் திரைப்படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் இருப்பார். அப்படிப்பட்ட அஜித் ஒரு நடிகருக்காக தன் கொள்கையை தளர்த்திக் கொண்டார் அந்த சம்பவத்தை இங்கே காணலாம்.

அஜித்தை வைத்து காதல் மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியவர் சரன் இவர் பாலச்சந்தர் உதவியாளர் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்தது அதனால் அவரை அஜித்திற்கு பிடித்து போக அமர்க்களம், அட்டகாசம், அசல் என தொடர்ந்து பல திரைப்படங்களை சரன் தான் இயக்கினார்.

அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை சரண் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது கமலை வைத்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது படப்பிடிப்பை துவங்க வேண்டிய நிலை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். கையை பிசைந்து கொண்டு அஜித்திடம் சென்றார் உடனே அஜித் அந்த விஷயத்தை புரிந்து கொண்டு தயாரிப்பாளர் இடம் நான் பேசிக் கொள்கிறேன் நீங்கள் கமல் சாரோட படத்தை பண்ணிட்டு வாங்க என சொன்னார் சரண் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை முடித்து விட்டு வரும் வரை மூன்று மாதங்கள் அஜித் அவருக்காக காத்திருந்தாராம்.