நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் இப்பொழுது கூட ஹச். வினோத் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். AK 61 திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார்.
ஏகே 61 படத்தை வருகின்ற தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது அஜித்தும் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம். இதுவரை AK 61 படத்தின் ஷூட்டிங் 32 நாட்கள் நடைபெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஆண்மையில் தெரிவித்தார். படத்தின் மொத்த நாளில் சுமார் 75 நாட்கள் தான் அதில் கிட்டத்தட்ட பாதி நாட்கள் முடிவடைந்த..
நிலையில் இன்னும் பாதி நாட்களில் படத்தை எடுத்து முடிக்க வினோத் பயங்கரமாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது இந்த படம் வலிமை படம் போல் இல்லாமல் சற்று வித்தியாசமான படமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அஜித்தின் 61 வது திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாகும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு உடல் எடையை குறைத்தே தற்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் அஜித் ரசிகர்கள் அஜித்தை இந்த நோக்கில் பார்க்க காத்துக்கொண்டு இருக்கின்றன..
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் நடிகை மஞ்சு வாரியர் உடன் விமானத்தில் இருந்து கீழே இறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
Latest Video Of AK #AjithKumar sir And @ManjuWarrier4 From Airport.. #AK61 -Shooting Mode 🔥 pic.twitter.com/zPA0mA2i8u
— Chaitra Reddy✨️ (@ChaitraReddyoff) May 19, 2022