தமிழ் சினிமாவில் கிங் மேக்கர் என அழைக்கப்படுபவர் தல அஜித், இவர் மிகப்பெரிய ரசிகர் கூட்டங்களைக் கொண்டவர், இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் ஏனென்றால் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
சமீபத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமைந்தது, அதனால் மக்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அஜீத் மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜை இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது, படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக அஜித் மீண்டும் பழையபடி கருப்பு முடியுடன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன, இந்த நிலையில் வெள்ளை உடையில் லேட்டஸ்ட் போட்டோ வைரளாகி வருகிறது.
இதொ அந்த புகைப்படம்
