லைக்கா நிறுவனத்திற்கு கட்டன் ரைட்டாக ஆர்டர் போட்டா அஜித்.! அதற்குக் காரணம் இதுதான்..

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித்குமார் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்த நிலையில் இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு பிறகு வெளிநாடு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் இவருடைய அடுத்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை லைக்கா நிறுவனம் மற்றும் அஜித்துக்கு பிடிக்காமல் போனதால் ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக அஜித்தின் படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார் என உறுதியான தகவல் வெளியானது. அந்த வகையில் தற்பொழுது ஏகே 62 படத்தின் வேலைகளும் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் அஜித் கதையை தேர்வு செய்வதில் மிகவும் கராராக இருந்த வருகிறாராம்.

எனவே நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு பிறகுதான் மகிழ்த்திருமேனியை தேர்வு செய்தாராம். அந்த வகையில் மகிழ் திருமேனி செய்த கதையும் பெருசாக பிரம்மாண்டமாக இல்லாத காரணத்தினால் மேலும் கதையை மெருகேற்ற வேண்டும் என அஜித் குமார் கூறினாராம். இவ்வாறு மிக முக்கியமாக அஜித்குமார் இந்த படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு இரண்டு வருடங்கள் ஓய்வெடுக்க போகிறார் எனவும் எனவே தன்னுடைய ரசிகர்களுக்கு தரமான கதை அம்சமுள்ள திரைப்படத்தினை தர வேண்டும் எனவும் முடிவு செய்து இருக்கிறாராம்.

இதனை அடுத்து துணிவு திரைப்படம் முடிந்த பிறகு தன்னுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை அஜித் தொடங்குவார் என கூறிய நிலையில் ஆனால் தற்பொழுது ஏகே 62 ரிலீஸ்க்கு பிறகு அஜித் அந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி விறுவிறுப்பாக படப்பிடிப்புகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து பட நிர்வாகிகளிடம் படத்தின் பட்ஜெட்டை முன்பே நிர்ணயிக்கக் கூடாது எனவும் பட வேலைகளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ அது செலவாகட்டும் படப்பிடிப்பு வேலைகள் முடிந்தவுடன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளலாம் என நடிகர் அஜித் கட்டன் ரைட்டாக லைக்கா நிறுவனத்திலும் கூறியுள்ளாராம்.

Leave a Comment