நடிகர் அஜித்குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வலிமை. இந்த படம் ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால் பொதுமக்கள் இந்த திரைப்படத்தை பார்த்து வருகின்றனர் 4 வாரங்கள் தொட்டு இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அந்த வகையில் அஜீத்தின் 61 வது திரைப்படத்தையும் ஹச். வினோத் இயக்க மிக பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் 62வது படத்திற்கான தயாரிப்பாளர் இயக்குனரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த வகையில் அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி கார்பரேட் நிறுவனமான லைகா தயாரிப்பு நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருக்கின்றன.
நடிகர் அஜித் கடைசியாக நடித்த வலிமை திரைப்படத்திற்காக 50 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தனது 62வது திரைப்படத்திற்காக சுமார் 100 கோடி சம்பளம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி விஜய் அவர்கள் ஏற்கனவே 100 கோடி சம்பளத்தை தொட்டுவிட்ட நிலையில் அஜீத் இப்போது தான்.
முதல் முறையாக 100 கோடி சம்பளத்தை கேட்டு உள்ளார் அதுவும் தற்போது உறுதிசெய்யப்படவில்லை பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திறமை மற்றும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துப் பார்க்கும் பொழுது 62வது திரைப்படத்திற்கு நூறு கோடி சம்பளம் வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.