ரஜினியின் பில்லா படத்தை விட இந்த ரீமேக் படத்தில் நடிக்கதான் அஜித்திற்கு ஆசையாம்.! பிரபல இயக்குனர் அதிரடி பேச்சு.

தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவரது படத்தை தற்போது ரீமேக் என்ற பெயரில் பல நடிகர்கள் நடிக்க போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர் ஆனால் ஒரு சில படங்கள் ரீமேக் செய்யப்பட்டு திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது அதிலும் குறிப்பாக  1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் பில்லா.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரீபிரியா, பாலாஜி ,மேஜர் சுந்தரராஜன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர் இப்படத்தை இயக்குனர்விஷ்ணுவர்தன் அவர்கள் அஜித்தை ரீமேக் செய்து படத்தை எடுத்தார். இப்படத்தில் அஜித்திற்காக ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன இருபின்னும் இந்த படம் பில்லா படமும் ஒன்று என்று சொல்லலாம் அது மட்டுமல்லாமல் தற்போது தல அஜித் அவர்கள் புகழின் உச்சத்திற்கு இருக்க இது ஒரு முக்கிய படமாக அமைந்தது.

அஜித் அவருகளுக்கோ ரஜினியின் மற்றொரு படத்தில்தான் ரீமேக்கில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்ததாம் அதுவும் பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் தான் அஜித் நடிக்க ஆசைப்பட்டார்  சொல்லப்போனால் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த சிட்டிசன் படத்திற்கு பிறகு இயக்குனர் மகேந்திரன் அவர்கள் திடீரென ஒரு கதையை தயார் செய்திருந்தாராம் . ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் கதையில் தல அஜித் அவர்கள் நடிக்க முடியாமல் போனது.

இந்தநிலையில் மகேந்திரனின் மகனும் இயக்குனர் ஜான் மகேந்திரன் பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி இருந்தார் அவர் கூறியது அஜித் ரஜினியின் ஜானி படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசை.  இதற்காக அப்பாவை அவர் சந்தித்திருக்கிறார் மேலும் ஜானி படத்தை நீங்கள் ரீமேக் செய்தால் அதில் நானே நடிக்கிறேன் அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் அவர் கூறியிருந்தார் அதேபோல அப்பாவும் ஜானி படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் எண்ணிய தாகவும் கூறியிருந்தார்.

Leave a Comment