அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் மீம்ஸ் கிரியேட் செய்து சமூகவலைதளத்தில் அதிர விடும் தேனி காவல்துறை.! வைரலாகும் மீம்ஸ்

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார், இந்த திரைப்படம் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது, இந்த திரைப் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து இருந்தவர் பேபி அனிகா.

இவரை யாரோ சிலர் அந்த திரைப்படத்தில் துரத்துவார்கள் அப்பொழுது அந்தப் பெண் நயன்தாராவுக்கு போன் செய்வார், அம்மா என்னை யாரோ துரத்துகிறார்கள் எனக் கூறுவார், அப்பொழுது நயன்தாரா மிகவும் பதற்றம் அடைந்து பேசிக்கொண்டிருப்பார் சற்று நேரத்தில் அஜித் அங்கே வருவார்.

அப்பொழுது நயன்தாரா இனி யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது என கூறுவார் இந்த காட்சியை மிகவும் அருமையாக வந்திருக்கும் இந்த காட்சியை மையப்படுத்தி தேனி காவல்துறையினர் மீன் ஒன்றை கிரியேட் செய்துள்ளார்கள்.

அந்த மீம்ஸ் இல் அம்மாவிடம் மகள் தன்னை யாரோ துரத்துவதாக சொல்ல அம்மா உன் மொபைலில் இருக்கும் காவலன் ஆப்பை அழுத்த சொல்வது போல் உடனே காவல்துறையினர் அங்கே வருவதுபோல் மீன் ரெடி பண்ணி வெளியிட்டுள்ளார்கள் இந்த மீம்ஸ் இணையதளத்தில் பணம் வேகமாக வைரலாகி வருகிறது.

தேனி மாவட்ட காவல்துறை விஸ்வாசம் சண்டைக் காட்சி டெம்ப்ளேட்டை பயன்படுத்தி காவலன் ஆப் விழிப்புணர்வு மீம் தயார் செய்திருக்கிறார்கள். அதிகம் பகிருங்கள் என பாராட்டியிருக்கிறார்.

https://twitter.com/AjithFCDindigul/status/1227092502366212096

Leave a Comment