அஜித் செய்த மாபெரும் சாதனை.! இது வேற லெவல் ரீச் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர், இவரின் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், மேலும் அஜித் ரசிகர்கள் அஜித்தின் எந்த தகவல் வந்தாலும் அன்று இணையதளங்களில் ட்ரென்ட் ஆக்கிவிடுவார்கள்.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நேர் கொண்ட பார்வை, இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பிரபலமாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, அதுமட்டுமில்லாமல் இந்த வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது அனைவரும் அறிந்ததே.

இப்படி இந்த இரண்டு திரைப்படங்களும் இந்த வருடத்தில் ஹிட்டாகியுள்ளது இந்தநிலையில் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது, அதுமட்டுமில்லாமல் இந்த பாடல்கள் அனைத்தும் யூடியூபில் இதுவரை 330 மில்லியன் ஹிட்ஸை கடந்துவிட்டது, இது அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக ஹிட்ஸ் அடித்த ஆல்பங்களில் விஸ்வாசம் திரைப்படம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

Viswasam
Viswasam