ஹீரோவும் நான் தான் வில்லனும் நான் தாண்டா.. அஜித் திரைப்படத்தை திருப்பி போட்ட திரைப்படம்..

villain movie : நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வளம் வருகிறார். இவர் என்னதான் ரசிகர் கூட்டத்தை கலைத்தாலும் இன்று வரை ஈசல் கூட்டம் போல் அஜித்தை சுற்றி கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள் அந்த அளவு அஜித்தின் மீது அதிக அன்பு வைத்துள்ளார்கள். அதேபோல் தன்னுடைய ரசிகர்களின் நலனுக்காக தான் அஜித் ரசிகர் மன்றத்தையே கலைத்தார்.

அஜித்திற்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் எழுந்தது என பலருக்கும் கேள்வி எழும்பிய நிலையில் அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் திரைப்படங்களும் தான். அந்த வகையில் அஜித் திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது வில்லன் திரைப்படம்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியிருந்தார். படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். ஒரு அஜித்குமார் மாற்றுத்திறனாளியாகவும் மற்றொரு அஜித்குமார் வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது .

ஆரம்பத்தில் இரண்டு அஜித்குமாரும் நன்றாக தான் இருப்பார்கள் ஆனால் பெப்சி விஜயால் தாக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக மாறிவிடுவார் தன்னுடைய தம்பிக்காக மட்டுமல்லாமல் அனாதை குழந்தைகள் மாற்றுத்திறனாளி குழந்தைகள் என அனைவருக்காகவும் அஜித் திருட்டு தொழிலை செய்த வேலை தொழிலாக வைத்திருந்தார்.

ஆனால் ஒருமுறை காவல்துறையிடம் அஜித் சிக்கிக் கொள்வார் அப்பொழுது மாற்றுத்திறனாளி அஜித்தை போல் நடித்து அங்கிருந்து வெளியே வந்து விடுவார் மாற்றுத்திறனாளியாக இருக்கும் அஜித் ஒரிஜினலாக மாறும்பொழுது திரையரங்கமே அதிர்ந்தது அந்த அளவு ரசிகர்கள் கைதட்டி வரவேர்த்தார்கள் அந்த கதாபாத்திரத்தை.

இந்த திரைப்படம் அஜித் திரைப்படத்தில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்டது அதேபோல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன. பல காலமாக அஜித் அப்படி ஒரு வெற்றியை கொடுத்ததில்லை வில்லன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

அஜித் வில்லன் திரைப்படத்தில் மிகவும் சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் நடித்திருப்பார் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் ஆகிவிட்டன ஆனாலும் இன்று வரை இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது வில்லன் என்றால் உடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அஜித் தான் அந்த அளவு இந்த திரைப்படத்தில் அஜித் நடித்திருப்பார்.

சமூக வலைதளத்தில் அஜித் வில்லன் என ஹாஸ்டல் கிரியேட் பண்ணி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.