அஜித் விஜய்யுடன் ஜோடிபோட்டு நடித்த சங்கவிக்கு இவ்வளவு அழகான மகளா.! வைரலாகும் புகைப்படம்

விஜய் மற்றும் அஜித் திரைப்படத்தில் நடித்து வந்த சங்கவிக்கு அழகான குழந்தை பிறந்தது தற்பொழுது அந்த குழந்தை மடமடவென வந்துவிட்டார் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கவி இவர் அஜீத் விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் அஜித்துடன் அமராவதி திரைப்படத்தில் நடித்ததன் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ரசிகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சங்கவி. தமிழில் விஜய் அவர்களுடன் அதிக திரைப்படத்தில் நடித்திருந்தார். விஜய்யுடன் இணைந்து விஷ்ணு,  நிலவே வா  ரசிகன் என பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சங்கவி. அதுமட்டுமில்லாமல் கமல் ரஜினி, சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

sangavi

சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்துள்ளார் இவர் நடித்த சீரியல் கல்யாண கோகுலத்தில் சீதை, தாய்வீடு, சாவித்திரி ஆகிய சீரியல்களும் அடக்கும் இந்தநிலையில் ஒரு காலகட்டத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் 2016ஆம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2020இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

sangavi

தற்பொழுது தான் உண்டு தன் குடும்ப வாழ்க்கை உண்டு என தன்னுடைய குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் சங்கவி.  அந்த வகையில் தன்னுடைய மகள் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..

Leave a Comment

Exit mobile version