அஜித்தா.? விஜய்யா.? மார்க் ஆண்டனி பட நடிகர் பேச்சு.! இப்படி ஒரு ஃபிளாஷ்பேக்கா

Ajith
Ajith

Ajith : ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிறந்த நடிகர் உருவாவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது கோலிவுட்டில் நடிப்பு அரக்கான மாறி உள்ளவர் எஸ் ஜே சூர்யா.  வில்லன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து மிரட்டி வருகிறார் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றி வரிசையில் இடம்பெறுகிறது.

கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மதன் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து பின்னி பெடலெடுத்தார் அதனைத் தொடர்ந்து சினிமா உலகில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். தொடர்ந்து பல நடிகரின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் தொடர்ந்து ரசிகர்கள் அஜித் படத்தில் நீங்கள் வில்லனாக நடிக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் எஸ்.ஜே சூர்யாவிடம் அஜித்தா.? விஜய்யா.? என கேள்வி முன்வைக்கப்பட்டது அதற்கு சற்றும் யோசிக்காத எஸ் ஜே சூர்யா அஜித் என கூறினார். ஏனெனில் என்னை நம்பி யார் சார் படம் கொடுப்பார். ஆனால் அஜித் சார் என்னை தேடி வந்து எனக்காக கதை பண்ணு வந்து சொன்னார்.

உதவி இயக்குனராக எவ்வளவு காலம் தான் இருக்கப் போற நீ ஒரு இயக்குனராக மாற வேண்டும் அதனால் என்ன வச்சு ஒரு படம் பண்ணுன்னு அவர் தேடி வந்தார் அதனால் அவரைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் எஸ் ஜே சூர்யா கூறினார்.

SJ Suryah
SJ Suryah

மேலும் தனக்கும் அஜித்துக்கும் உள்ள நெருக்கம் மார்க் ஆண்டனியில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், விஷாலுக்கும் உள்ள நெருக்கம் போல் என்றும், ஆதிக்கையும் – விஷாலையும் பார்க்கும் பொழுதெல்லாம் நானும், அஜித் சாரும் இருக்குற மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தும் என எஸ்.ஜே சூர்யா கூறினார்.