அஜித் H வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது இந்த நிலையில் மீண்டும் ஹச் வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு சிலரோ அஜித் ஒரே ஒரு வேடத்தில் மட்டும்தான் நடிக்கிறார் என கூறுகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீத் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதை எழுதுவதில் விக்னேஷ் சிவன் முன்புறமாக ஈடுபட்டு வருகிறார்.
தற்பொழுது கதை எழுதி முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. திரைக்கதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அஜித் 62 திரைப்படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் அஜித் தமிழகம் முழுவதும் ஹோட்டல் திறப்பது போலவும் அதற்காக அஜித் மிகவும் கஷ்டப்படுவார் எனவும் பல சிக்கல்களை சந்திப்பார் அதிலிருந்து எப்படி மீண்டு உச்சத்தை அடைகிறார்கள் என்பது தான் கதை.
மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் எளிமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதனால் அஜித் 62 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் கூறியதாவது காற்றுவாக்கில் இரண்டு காதல் திரைப்படத்தின் ப்ரோமோஷனனுக்காக ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்அப்பொழுது அவர் கூறிய தகவல் தான் ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் அவர்களிடம் ரசிகர்கள் அஜித் 62 திரைப்படத்தின் கதை பற்றி கேட்டார்கள் அதற்கு விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்துள்ளேன் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய முழு உழைப்பையும் அஜித் 62 திரைப்படத்தில் காட்டுவேன் எனவும் கூறியுள்ளார்.