அஜித்தை வீடியோ எடுத்ததால் வந்த வில்லங்கம்.! உதவி கேட்டு தல-யை சந்திக்க முடியாமல் தவிக்கும் பெண்.!

ajith valimnai
ajith valimnai

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் வசூலிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக அஜித்தின் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து வருகிறது.

அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை முழுமூச்சாக விரும்புகிறார்கள் அந்தளவு அஜித் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் அதனால் எங்கு சென்றாலும் அவருடன்  புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில் சமீபத்தில் அஜித் வாக்களிக்க சென்ற இடத்தில் ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் பலரும் வீடியோவும் எடுத்தார்கள் இந்த  நிலையில் ரசிகர் ஒருவர் அஜித்தின் அருகில் சென்று அஜித்தை புகைப்படம் எடுத்த அப்பொழுது அஜித் கோபப்பட்ட போனை புடுங்கி கொண்டார்.

அந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன் பிறகு அந்த போனை கொடுத்து விட்டு முககவசம்  அணியுங்கள் என அஜீத் அறிவுரை வழங்கினார். இப்படிதான் பிரபல மருத்துவமனைக்கு  வந்த அஜித்தை அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனால் அந்தப் பெண்ணை பணிநீக்கம் செய்தது  மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக கூறியது.

அதனால் அந்தப் பெண் தவறான முடிவை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த பொழுது நடைபெற்றது அதாவது சமூக வலைதளத்தில் அந்த வீடியோ பரவி வைரலானது அதனை தொடர்ந்து அஜித்தை வீடியோ எடுத்த சம்பந்தப்பட்ட அந்த பர்சானா மீது மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்து அதிரடி காட்டியது.

இந்த நிலையில் அந்தப் பெண் தன்னுடைய தவறை உணர்ந்து அஜித்தை நேரில் சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு பின்பு தன்னுடைய வேலையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமென முடிவு செய்துள்ளார். இதற்காக ஓராண்டாக அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என அவருடைய வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் வீட்டில் பாதுகாவலர்கள் அஜித்தை சந்திக்க அனுமதி மறுத்துள்ளார்கள்.

இதனையடுத்து பெப்சி யூனியன் மூலம் அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார் ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை மேலும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரை தொடர்பு கொண்டு பேசினார் அந்த பெண் ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை என தவறான முடிவை எடுக்க முயற்சி செய்துள்ளார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.