25 வயது இளம் பையன் போல் அதிரடியாக உடல் எடையை குறைத்த அஜித்.! இதுதான் விடா முயற்சி கெட்டப்பா ..

vidaamuyarchi : நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில்   தொடங்கியது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது கலை இயக்குனர் மரணமடைந்தார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் மீண்டும் தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு அசார் பைஜானில் துவங்கியுள்ளது.

ஏற்கனவே விடா முயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் அஜித் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். சமீப காலமாக அஜித் உடல் எடையை அதிகரித்து குண்டாக காணப்பட்டார் இதனால் பல  ரசிகர்கள் கிண்டல் அடித்தார்கள்.

கிண்டல் அடித்த அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கும்படி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்து 25 வயது பையனைப் போல் ஸ்லிம்மாக மாறி உள்ளார். நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்திற்காக தான் இப்படி உடல் எடையை குறைத்துள்ளார் என குறிப்பிடுகிறது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால் ஒரு அஜித் எங்க்காக நடிப்பதற்காக தான் இந்த உடல் எடை குறைத்துள்ளார் எனவும் கூறுகிறார்கள்.

இதோ அஜித் உடல் எடையை குறைத்த புகைப்படம்.

ajith vidamuyarchi
ajith vidamuyarchi