அஜித்தின் மெகா ஹிட் படமான வீரம் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமார்.! இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

0
veeram
veeram

சமீப காலமாக ரீமிக்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது சினிமா உலகில், அந்த வகையில் மற்ற மொழிகளில் ரிலீசாகி ஹிட்டான திரைப்படங்களை ரீமிக்ஸ் செய்து வருகிறார்கள், அதேபோல் பாலிவுட் சினிமாவில் நமது தென்னிந்திய திரைப்படங்களின் ரீமேக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் கூட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை கபீர் சிங் என ரீமிக்ஸ் செய்து வெளியாகி ஹிட் அடித்தது, அக்ஷய குமார் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அதேபோல ரீமேக் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், சிறுத்தை, சந்திரமுகி, துப்பாக்கி, காஞ்சனா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக ரீமிக்ஸ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் அஜீத் நடித்த வீரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வசூல் வேட்டை நடத்தியது, இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா தான் இயக்கியிருந்தார், தற்பொழுது இதன் ஹிந்தி ரீமேக் எடுக்க இருக்கிறார்கள் இதற்கு முதலில் சல்மான்கான், பின்பு விக்கி ஆகியோர்கள் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின ஆனால் தற்பொழுது அக்ஷய் குமார் தான் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை சாஜித் நாடியாத்வாளா தயாரிப்பில் பார்ஹட் சம்ஜி இயக்கத்தில் உருவாக இருக்கிறது படத்திற்கு ‘பச்சன் பாண்டே’ என பெயர் வைத்துள்ளார்கள் இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

bachan-pandey-akshay-kumar
bachan-pandey-akshay-kumar