2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் வீரம் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரதீப் எனப் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.
இந்த திரைப்படம் வெறும் 45 கோடியில் எடுக்கப்பட்டது ஆனால் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்தது என பாக்ஸ் ஆபீஸ் விவரம் தெரியவந்தது. இந்த வீரம் திரைப்படத்தில் இயக்குனரான சிறுத்தை சிவாவின் தம்பி பாலாவும் நடித்திருப்பார் இவர் 2003 ஆம் ஆண்டு வெளியாகிய அன்பு என்ற படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு பாலா காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்வம், கலிங்கா, மஞ்சள் வெயில் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை அதனால் மலையாள திரைப்படத்திற்கு சென்றுவிட்டார். அஜித்தின் வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தார்.
சிறுத்தை சிவாவின் தம்பி பாலா கேரளாவை சேர்ந்தவர் இவர் பின்னணி பாடகி அம்ருதாவை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார் இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் அம்ருதா தனியாக இசைக்குழுவை ஆரம்பித்தார் அதன்பிறகுதான் வீட்டிற்குள் நடித்தது பிரச்சனை. சிறு சிறு விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்ட அம்ருதா ஏதாவது ஒரு சண்டை என்றால் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விடுவாராம்.
![veeram](http://localhost/tamilnew/wp-content/uploads/2021/09/bala-4.jpg)
இந்த நிலையில் சில வருடங்களாகவே இவர்களுக்குள் சில பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் 2015ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள் 2019ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று ஒரேடியாக பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு சிறுத்தை சிவாவின் தம்பி பாலா எலிசபெத் என்ற மருத்துவரை திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார் பாலா. அதுமட்டுமில்லாமல் இவர்களின் திருமண வரவேற்ப்பு இன்று நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்குள் திருமணம் முடிந்து விட்டது என உறுதி செய்துள்ளார்கள் ரசிகர்கள்.
![veeram](http://localhost/tamilnew/wp-content/uploads/2021/09/veeram.jpg)