அஜித் நடித்து மெஹா ஹிட்டான இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிதான்.! பல நாள் ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கேஎஸ் ரவிக்குமார் இயக்க இருந்த திரைப்படத்தில் அஜித் நடித்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்க இருந்த திரைப்படம் அஜித் நடித்த வரலாறு திரைப்படம் ஆகும், இந்த திரைப்படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் கூறிய பொழுது அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் படத்தின் டைட்டிலை கூட தேர்வு செய்துவிட்டார்கள் அதன்பின்னர்தான் ஜக்குபாய் படத்தின் பணிகள் தொடங்கி திடீரென திரைப்படம் நின்று விட்டதாகவும் கூறினார்.

அதேபோல் ரஜினியும்  சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டதால் வரலாறு திரைப்படத்தின் கதை அஜித்திடம் கூறியதாகவும் அஜித்தும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார், அதனால் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கி விட்டது என கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்தநிலையில் கேஎஸ் ரவிக்குமார் ரஜினியே ஒருநாள் சந்தித்தபொழுது வரலாறு திரைப் படத்தில் நான் நடிப்பதாக கூறி இருந்தேன் ஏன் எனக்கு அந்த படத்தை தரவில்லை என ரஜினி கேட்டதாகவும் உண்மையில் அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் தான் நடிக்க வேண்டியது எனவும் ஒரு பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

கே எஸ் ரவிக்குமார் கொடுத்த பேட்டியின் மூலம் தான் தெரிகிறது அஜித் கொடுத்த மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை  ரஜினி மிஸ் செய்துள்ளார் என்பது.

Leave a Comment