தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் தற்பொழுது ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரிக்கிறார். வலிமை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் எடுக்கப்படுவதாக படக்குழு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
படத்தில் நாயகி மற்றும் வில்லன் யார் என்றே தெரியாத வண்ணம் படக்குழு மறைமுகமாக செயல்படுத்தி வருகிறது. இதுவரையிலும் வில்லன் யாரென்று தெரியாத வகையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜித் அவர்களை வைத்து படம் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் போனி கபூர் அவர்களிடம் அன்பாகவும் கோபமாகவும் கேட்டு பார்த்துவிட்டனர் இதற்கு போனிகபூர் அவர்கள் ஒரு பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறார்
படக்குழு ஒருவழியாக ஹீரோயினை தேர்ந்தெடுத்துள்ளது பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரோஷி சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்படத்தில் அஜித்துக்கு வில்லன் யார் என்பதிலேயே கவனத்தை நோக்கி உள்ளனர்.
இப்படத்திற்கு வில்லனாக அருண் விஜய், பிரசன்னா மற்றும் கார்த்திகேயா இவர்களில் எவரேனும் ஒருவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் நவதீப் அவர்கள் அஜித்திற்கு வில்லனாக உள்ளார் என்று தற்போது எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்றளவிலும் வெளிவரவில்லை.