மகிழ்ச்சியில் தல அஜித் ரசிகர்கள்.. பட ரிலீஸுக்கு முன்பே பாகுபலி திரைப்படத்தின் சாதனையை முறியடித்த வலிமை..

0

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் திரைப்படம் தல அஜித்தின் வலிமை. கடைசியாக தல அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.இத்திரைப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக அமைந்ததால் விமர்சன ரீதியாக பலரும் பாராட்டி இருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் ரிலீசாகவில்லை கிட்டத்தட்ட நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸ்சாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. எனவே இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் பெரும் கவலையிலும்,வலிமை திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புடனும் இருந்து வருகிறார்கள்.

அதோடு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் இதுவரையிலும் வரவில்லை இரண்டு முறை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தேதியை அறிவித்து இருந்தார்கள். இதனால் பலர் பொதுவாக ரிலீஸ் செய்யும் தேதியை தான் மாற்றுவார்கள் ஆனால் வலிமை திரைப்படத்திற்கு மட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியையே இரண்டு முறை மாற்றி விட்டார்கள் என்று கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் தல அஜித் ரசிகர்கள் நாங்கள் எப்பொழுது வந்தால் வலிமை திரைப்படத்திற்காக காத்திருப்போம் என்று கூறியுள்ள நிலையில் தற்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வலிமை படம் வெளியாவதற்கு முன்னரே  பாகுபலி சாதனையை முறியடித்து விட்டது என்று தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது ஆனால் பாகுபலி திரைப்படத்தை ஓவர்டேக் செய்து தற்பொழுது வலிமை திரைப்படம்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. புக் மை ஷோ என்ற டிக்கெட் புக்கிங் தளத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

valimai ajith
valimai ajith

இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் விருப்பமான படங்களின் லிஸ்டில் சில வருடங்களாகவே அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற படம்தான் 17 லட்சம் வித்தியாசத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது.  இந்நிலையில் தல அஜித்தின் வலிமை, திரைப்படம் ரிலீஸ்சாவதற்கு லேட் ஆனாலும் கூட கண்டிப்பாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று விடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.