வலிமையில் அஜித் பயன்படுத்திய விலை உயர்ந்த பைக் என்ன தெரியுமா.? எத்தனை லட்சம் தெரியுமா.?

0

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் அமோக வெற்றியை பெற்றதால் இரண்டாவது முறையாக இவர்கள் மூவரும் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இவ்வாறு சில மாதங்களாக வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்து வந்தார்கள். எனவே தற்போது தான் வலிமை திரைப்படத்தின் படக்குழுவினர்கள் மனமிரங்கி சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டார்கள்.

ரசிகர்கள் மனதை வெகுவாக கவர வேண்டும் என்பதற்காக கேம் போன்ற போஸ்டரை ரெடி செய்து வீடியோவாக அப்டேட் செய்தனர்.  இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று யூட்யூபில் 10 மில்லியன் பார்வையாளர்களையும் ஒரு லைக்குகளையும் கடந்துள்ளது மோஷன் போஸ்டர்.

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் முழுக்க முழுக்க பைக்கை வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளதாக மோஷன் போஸ்டரை உணர்த்துகிறது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் அஜித் உபயோகப்படுத்தும் காரின் பெயர் மற்றும் விலையைப் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இந்த பைக் இத்தாலியை சேர்ந்த நிறுவனம் தயாரித்த எம்வி அகஸ்டா ப்ரூட்டலே 800cc வகையை பயன்படுத்தி உள்ளாராம். அதோடு இந்த பைக் அஜித்திற்கு மிகவும் பிடித்ததாம் இந்திய மதிப்பில் இந்த பைக்கின் விலை 18 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திகேயா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு இத்திரைப்படத்தில் இவர் சுசுகி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட சுசுகி கிங் என்ற வகை பயன்படுத்தி உள்ளாராம் இந்த பைக்கின் விலை இந்திய அளவில் 11 லட்சம் என்கிறார்கள்.