இந்த நடிகர் தான் வலிமை படத்தின் வில்லனா.? அப்போ சண்டை காட்சிக்கு பஞ்சமே இருக்காது

ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள். இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இந்த நிலையில் அஜீத் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட சுவிட்சர்லாந்து பைக் ரேஸ் காட்சி மற்றும் கார் ரேஸ் போன்ற காட்சிகள் இடம் பேற்று வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் அஜித்திற்கு காயம் எற்பட்டதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர் இருப்பினும் அவரது ரசிகர்கள் அவர் குணமாக வேண்டுமென இறைவனை வேண்டினர். இந்தநிலையில் இப்படத்தின் வில்லன் யார் என்று தெரியாததால் இவரா,அவரா என்ன பலர் கூறிவந்தனர்.

இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுத்த சந்தோஷத்தில் உள்ளனர்.மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளன.