தனக்கு ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்காக கஷ்டப்படும் அஜித்.! அஜீத்தின் மேனேஜர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் வலிமை திரைப்படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் அஜித்திற்கு ஜோடியாக ஹிமா குரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வலிமை திரைப்படத்தில் தல அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் சிறிது ஓய்வு இல்லாமல் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவல் உண்மையான தகவலா இல்லை வதந்தியா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் தல அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜீத்திற்கு பைக் மற்றும் கார் சேசங் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அஜித் ஸ்டன்ட் செய்யும் புகைப்படம் சோசியல் மீடியாவில்  வைரலாகி வந்தது. இந்த நிலையில் சுரேஷ் சந்திரா வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார் திரு அஜித் குமார்.

அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் ஆகியோர் இருவரும் ஒருங்கிணைந்து வலிமை திரைப்படத்தின் அப்டேட் குறித்து முடிவு எடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்,  முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் அவர்களது முடிவுக்கு மதிப்பளிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.

suresh
suresh

Leave a Comment