கொளுத்துங்கள் வெடிய வலிமை பட அப்டேட் இதுதான்.! ஜூலை வலிமை தான்..

0

பொதுவாக சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களின் நடிப்பில் ஏதாவது ஒரு திரைப்படம் உருவாகி வந்தால் அந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்து வருவது வழக்கம் அந்த வகையில் அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை.

இத்திரைப்படத்தினை பற்றி கிட்டத்தட்ட 600 நாட்களாக எந்த தகவலும் வெளியாகாமல் வெளிவராமல் இருந்து வந்தது. அதன் பிறகு ரசிகர்கள் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி இத்திரைப்படத்தினை பற்றி பல தகவல்களையும் அறிந்து கொண்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மே ஒன்றாம் தேதி தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தல அஜித் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகு மீண்டும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதாக கூறினார்கள்.

ஆனால் அவ்வப்போது வெளியாகவில்லை எனவே பலரும் பொதுவாக ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தான் மாற்றுவார்கள் ஆனால் வலிமை திரைப்படத்தில் மட்டும்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதியையே இரண்டு முறை மாற்றிவுள்ளார்கள் என்று கூறி வந்தார்கள்.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் எப்பொழுது வலிமை திரைப்படம் வந்தாலும் நாங்கள் காத்திருப்போம் என்று கூறிய திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள்.. இப்படிப்பட்ட திரைப்படத்தின் பற்றிய புதிய அப்டேட்கள் வெளிவந்துள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் இத்திரைபடத்திற்கான வேலைகள் என்னன்னவெல்லாம் நடக்கும் என்று கூறி உள்ளார்கள். அந்தவகையில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இம்மாதம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாம்.

தற்போது நடக்கவுள்ள அந்த படப்பிடிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து வரும் ஒட்டு மொத்த படக்குழுவினரும் ஒன்றிணைய உள்ளார்களாம். அதோடு பல மாதங்களாக ரசிகர்கள் காத்துவரும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதமே வெளியாக உள்ளதாம். அதோடு கண்டிப்பாக இந்த வருடம் ஒரு சிறப்பான நாளில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறியுள்ளார்கள்.