இதுவரையிலும் அஜித்தின் வலிமை திரைப்படம்.? அள்ளிய வசூல் நிலவரம் இதோ.

0
valimai
valimai

நடிகர் அஜித் சினிமா உலகில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர்களின் முக்கிய ஒருவராக பார்க்கப்படும் நடிகர். இவர் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை பல படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் இவரது ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும்..

இவரது ரசிகர்கள் அஜித்திற்கு பக்கபலமாக நிற்கின்றனர். அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் கொரோனா தொற்று என பல பிரச்னைகளை கடந்து கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் இதற மாநிலங்களில் கோலாகலமாக வலிமை திரைப்படம் வெளிவந்தது.

இந்த படம் வெளிவந்த நாள் முதல் தற்போது வரை திரையரங்கில் வலிமை திரைப்படத்தை காண மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகின்றன. மேலும் நாளுக்கு நாள் வசூல் வேட்டை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து வில்லன் கார்த்திகேயா, ஹீமா குரோஷி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர்.

இந்த படத்தை அஜித்தின் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய ஹெச் வினோத் இரண்டாவது முறையாக அஜித்தின் படத்தை இயக்கியுள்ளார். மேலும் வலிமை திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை திரைப்படம் முதல் நாள் வசூலில் இதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் வேட்டை நடத்திய திரைப்படமாக அமைந்துள்ளது அதை எடுத்து நாளுக்குநாள் வலிமை திரைப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில் தற்போது வரை 190 கோடி வசூலை ஈட்டி உள்ளதாம். மேலும் கூடிய விரைவில் 200 கோடியைத் தொட்டுவிடும் என கூறப்படுகின்றன.