அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரேஸ் காட்சிகளுடன் வெளியானது வலிமை திரைப்படத்தின் புதிய டீஸர்.! வேற லெவல் தான் எனக் கூறும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அது மட்டுமில்லாமல் அஜித் திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் அந்தளவு அஜித் ரசிகர்கள் அஜித் மீது அன்பை வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதனால் பிப்ரவரி 24ஆம் தேதியை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் இரண்டு வருடங்களாக அஜித் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது அதனால் அஜித் ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்புடன் இருக்கிறார்கள்.

வலிமை திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கியுள்ளார் அதேபோல் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு புரோமோஷன் வேலைகள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

வருந்திய ரசிகர்களுக்கு தரமான வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த வீடியோ அஜித் ரசிகர்களையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் இந்த டீசரில் தல அஜித் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது. மேலும் வலிமை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் இந்த நிலையில் ஒரு சில பிரபலங்கள் வலிமை திரைப்படத்தை காணுவதற்கு தவமாய் தவம் இருக்கிறேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment